ETV Bharat / state

வார சந்தையில் கைவரிசை காட்டிய செல்போன் திருடன் - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை - திருட்டு சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம் அருகேவுள்ள திருப்புலிவனம் பகுதியில் நடந்த வார சந்தையில் காய்கறி வாங்குவது போல் வந்து செல்போனை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர்.

வார சந்தையில் கைவரிசை காட்டிய செல்போன் திருடன்
வார சந்தையில் கைவரிசை காட்டிய செல்போவார சந்தையில் கைவரிசை காட்டிய செல்போன் திருடன்ன் திருடன்
author img

By

Published : Jun 30, 2022, 10:15 PM IST

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வார சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில் திருப்புலிவனம் கிராமத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த விவசாய விளைபொருள்களை நேரடியாக பொது மக்களுக்கு விற்பனை செய்வர்.

இச்சந்தையில் திருப்புலிவனம் கிராமத்தைச் சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்க வருகை புரிவர். இதனால் கூட்டநெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் இச்சந்தையில் தொடர்ச்சியாக செல்போன் திருட்டு நடைபெற்று வந்தது. இக்குற்றச்செயலை தடுக்க திருப்புலிவனம் கிராமப் மக்கள் மற்றும் வியாபாரிகள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

வார சந்தையில் கைவரிசை காட்டிய செல்போன் திருடன்

இந்நிலையில் நேற்று (ஜூன் 29) நடைபெற்ற வார சந்தையில் காய்கறிகளை வாங்கச் சென்ற திருப்புலிவனம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடைய செல்போன் திருடு போனது. இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர், திருப்புலிவனம் சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில், ராஜா சட்டையின் மேல் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை கைப்பை வைத்து மறைத்து அவரது கவனத்தை சிதறடித்து லாவகமாக செல்போன் திருடன் ஒருவன் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து இது குறித்து உத்திரமேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி கட்சியின் உதவியுடன் செல்போன் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆண்டிபட்டி வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.