ETV Bharat / state

ஃபைனான்ஸ் நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி - கும்பலுக்கு போலீஸ் வலை

author img

By

Published : Jul 24, 2019, 9:14 PM IST

தஞ்சை: அதிராம்பட்டினம் பகுதியில் மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

cheating

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சாப் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஒருமாதமாக இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தினர், ஐந்து ஆயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் ரூபாய் கடனும், பத்தாயிரம் ரூபாய் கட்டினால் இரண்டு லட்சம் ரூபாய் கடனும், 15 ஆயிரம் ரூபாய் கட்டினால் மூன்று லட்ச ரூபாய் கடனும், அதற்கு மேல் 30 லட்சம் ரூபாய் வரை சுய உதவிக் குழுக்களுக்கான கடன், அதற்கான தனிநபர் கடன் ஆகியவை வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தனர்.

இதை நம்பிய அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அந்நிறுவனத்தில் பணத்தை கட்டியுள்ளனர். இந்நிலையில், அந்நிறுவனம் இன்று திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு பணம் கட்டியவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது, மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஃபைனான்ஸ் மோசடி

அதன்பின், அதில் வேலை பார்த்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது தாங்கள் தொடர்புகொண்டபோதும் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஊழியர்கள் தெரிவித்ததால், பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பணம் கட்டிய மக்கள் ஆத்திரத்தில் அந்த பைனான்ஸ் நிறுவன கதவை அடித்து நொறுக்கினர்.

பின்னர் அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro:மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் ஒரு கோடிக்கு மேல் மோசடி மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு

Body:தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள sap என்ற மைக்ரோ பைனான்ஸ் கடந்த ஒரு மாத காலமாக இயங்கி வந்தது இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் ரூபாய் கடனும் பத்தாயிரம் ரூபாய் கட்டினால் 2 லட்சம் ரூபாய் கடனும் 15 ஆயிரம் ரூபாய் கட்டினால் 3 லட்ச ரூபாய் கடனும் அதற்கு மேல் 30 லட்சம் வரை சுய உதவி குழுக்களுக்கான கடன் அதற்கான கடன் தனிநபர் கடன் ஆகியவை வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான வசனங்களை துவங்கினர். இந்நிலையில் திடீரென அந்த நிறுவனம் திறக்கப்படாமல் இருந்தது கண்டு பணம் கட்டியவர்கள் சந்தேகமடைந்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது அந்த மொபைல் எண் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் வேலை பார்த்த ஊழியர்களிடம் விசாரித்ததில் நாங்களும் தொடர்புகொள்ள பார்த்தோம் ஆனால் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது எங்களுக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி பணம் கட்டிய மக்கள் ஏராளமானோர் அந்த பைனான்ஸ் கதவை உடைத்து அடித்து நொறுக்கினர். மேலும் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.