ETV Bharat / state

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

தூத்துக்குடி: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

thanjavur
author img

By

Published : Nov 25, 2019, 11:46 AM IST

தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்றும் மகனும் இருந்தனர்.

இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியதால் தான், மனமுடைந்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்; அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி இன்று மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

thanjavur
கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் கனக ரத்தினமணி

இதையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வரும் கனக ரத்தினமணியை தற்கொலைக்குத் தூண்டுதல், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டது உட்பட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு ஆசிரியர் ஞானபிரகாசத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - கண்ணீர் வடிக்கும் பெற்றோர்

Intro:தூத்துக்குடியில் பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை கைது - தலைமறைவான ஆசிரியருக்கு போலீசார் வலைவீச்சு.
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களது மகள் மரிய ஐஸ்வர்யா (16), மகன் தாம் ஆண்ட்ரூஸ். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பள்ளியில் தாம் ஆண்ட்ரூஸ் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று காலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தாம் ஆண்ட்ரூஸ் பள்ளிக்கு சென்று விட்டான். மரிய ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மதியம் சாப்பிடுவதற்காக பள்ளியில் இருந்து தாம் ஆண்ட்ரூஸ் வீட்டிற்கு வந்தான். தனது அக்காளை வீட்டில் தேடிப்பார்த்தான். அப்போது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று பார்த்தபோது மரிய ஐஸ்வர்யா அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மரிய ஐஸ்வர்யாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவள் படித்த பள்ளி முன்பு திரண்டனர். இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதனால் மரிய ஐஸ்வர்யா 2 நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை. பின்னர் பள்ளிக்கு சென்ற மரிய ஐஸ்வர்யாவை ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் 150 தோப்புகரணம் போடச் சொல்லியும், பள்ளியை ஒருமுறை சுற்றி வரும்படியும் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் ஒழுங்காக பள்ளிக்கு வரவில்லை என்றால் தேர்வு எழுத முடியாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மரிய ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எனவே இதற்கு காரணமான அந்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும். இதனை கண்டு கொள்ளாமல் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரிரை கைது செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி இன்று பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடைநிலை ஆசிரியராக அதே பள்ளியில் பணியாற்றி கடந்த 2 வருடங்களாக அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வரும் கனகரத்தினமணியை தற்கொலைக்கு தூண்டுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ஞானபிரகாசத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.