ETV Bharat / state

தகுந்த இடைவெளியை பின்பற்றாத மக்கள்....கரோனா பரவும் அபாயம்!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் செல்வதால் அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் செல்லும் காட்சி

author img

By

Published : May 5, 2020, 11:05 AM IST

தமிழ்நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மத்திய அரசின் சில வழிகாட்டுதலின்படி மாநில அரசு சில தளர்வை கொண்டுவந்தது. அதன்படி தனி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

மேலும் தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி கூட்டமாக கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்தத் தளர்வை பொதுமக்கள் தவறாக எண்ணிக்கொண்டு ஊரடங்கிற்கு முன்பு உள்ள நடைமுறை போல் எண்ணிக்கொண்டு பொதுமக்கள் அதிக அளவிலான இரு சக்கர வாகனத்தில் பயணிக்க தொடங்கியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்களும் அதிக அளவில் வெளியே வருவதால் தகுந்த இடைவெளி பின்பற்றப்படாமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் நகரப் பகுதிகள் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.