தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை குலால் தெருவில் உள்ள முருகன் கோயிலுக்கு சொந்தமான இடமானது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி சிலர் உள்வாடகைக்கு விட்டது மட்டுமின்றி எந்த விதமான வரியும் கட்டாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து, அறநிலையத் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது, திடீரென்று 30க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 50பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கழிவு நீரோடு யமுனை...! மஞ்சள் நிறமான தாஜ்மஹால்...! விழிபிதுங்கும் உத்தரப் பிரதேச அரசு...!