நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்தியாவசிப் பொருள்களை வாங்க குடும்பத்தில் ஒருவர், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியில் வர மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.
அதற்காக மூன்று வண்ண அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பச்சை வண்ண அனுமதி அட்டைதாரர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் மட்டுமே வெளியில் வரவேண்டும். அதன்படி இன்று திங்கள் கிழமை என்பதால் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் வாகன சோதனையில் காவல்துறையினர் பச்சை வண்ண அனுமதி அட்டையில்லாமல் வெளியில் இருச்சக்கர வானங்களில் சுற்றியவர்களுக்கு அபாராதம் விதித்தனர்.
அப்போது நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இருசக்கர வானத்தில் மகனுடன் வந்தப் பெண்ணை நிறுத்தி ஒருவருக்குத் தான் வெளியில் வர அனுமதி எனக்கூறி, இருவர் வந்ததால் அபராதம் விதித்தனர். ஊரடங்கு உத்தரவால் கையில் காசில்லாமல் நியாய விலைக் கடையில் பொருள் வாங்கச் செல்கிறேன் என்னிடம் அபராதம் கேட்டால் என்ன செய்வேன் என அந்தப் பெண் அழத்தொடங்கியதால் அங்கு சற்று சலசலப்பு நிலவியது.
இதையும் படிங்க: மதுரையில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ. 77 லட்சம் அபராதம்!