ETV Bharat / state

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க - பழ.நெடுமாறன் - eezham tamilians

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஈழத் தமிழர்களான நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க - பழ.நெடுமாறன்

author img

By

Published : May 19, 2023, 8:59 AM IST

உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பு

தஞ்சாவூர்: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழினப் படுகொலை நாள் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (மே 18) நடைபெற்றது.

இதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பழ.நெடுமாறன், “நானும், இந்த தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய எட்டு கோடி தமிழ் மக்களும், சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தோம் என்றால், இல்லை.

அந்த ஒற்றுமை நமக்குள் ஏற்படவில்லை. ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டுமல்ல, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியார் பிரச்னை போன்றவற்றில் கூட நமக்குள் அந்த ஒற்றுமை கிடையாது. இதை இந்திய அரசு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அது அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி. ஆகவே, இந்தியா ஈழத் தமிழர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் வர மறுக்கிறது.

2009ஆம் ஆண்டில் அன்றைக்கு இருந்த மன்மோகன் சிங் அரசு கையாண்ட தவறான கொள்கையின் விளைவாக, விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் செய்த அந்த செயல், இன்றைக்கு சீனா அங்கு ஆழமாக கால் ஊன்றுவதற்கும், இந்தியாவிற்கு எந்த நாடும் தளமாக இலங்கையை பயன்படுத்துவதற்கும் காரணமாகி விட்டது.

ஈழத் தமிழர்கள் எவ்வளவோ ரத்தம் சிந்தி இருக்கிறார்கள். குடும்பம், குடும்பமாக அழிந்து போயிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்னமும் தங்கள் தாயகத்தை மீட்க வேண்டும் என்ற உறுதியோடு, அவர்கள் இவ்வளவு துயரத்திற்கு நடுவிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களின் நம்பிக்கை வெற்றி பெற வேண்டுமானால், நாம் அவர்களுக்கு எந்த வேறுபாடும் இல்லாமல் 8 கோடி தமிழ் மக்களும் துணை நின்று, ஆதரவுக்கரம் நீட்டுவோமேயானால், அவர்களின் நம்பிக்கை நிச்சயமாக வெற்றி பெறும். அதற்கான நல்ல சூழல் உருவாகி இருக்கின்றன. அதைத்தான் சில மாதங்களுக்கு முன்னால் நான் அறிவித்தேன்” என கூறினார்.

பின்னர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் போரில் இறந்த தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் வீரவணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், “2009ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி இருக்கிறோம். 14 ஆண்டுகள் கடந்தோடி விட்டன.

ஆனால், அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை உலகம் இன்னும் தண்டிப்பதற்கு முன் வரவில்லை. இலங்கையில் வாழக்கூடிய சிங்கள மக்களே, யார் இந்த இனப்படுகொலை செய்தார்களோ, அவர்களை நாட்டை விட்டே விரட்டி இருக்கிறார்கள். சிங்கள மக்களுக்கு இருந்த இந்த உணர்வு, உலக நாடுகளுக்கு வரவில்லை.

ஆகவே, இந்த இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் எங்கே இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்துவதற்கும், தண்டிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு இந்தியா முன் நிற்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு ஒட்டு மொத்தமாக தூக்கு தண்டனை விதித்தது, உச்சநீதிமன்றம்.

அதில் 19 பேரை விடுதலை செய்தது. மீதம் இருந்த ஏழு பேரையும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரிலே விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்த பிறகு, அவர்களை சிறப்பு முகாம் என்ற சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது.

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோளாக, தயவுசெய்து இந்த நான்கு பேரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் தமிழ்மணி, அயனாவரம் முருகேசன், புதுக்கோட்டை துரை மதிவாணன், பழனிராஜன், துரை குபேந்திரன், பேராசிரியர்கள் ஜெயராமன், பாரி, பொறியாளர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.