தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பொதுவுடையார் கோயில். வருடத்தின் பெரும்பான்மையான நாள்களில் பூட்டியே இருக்கும் இந்தக் கோயில் பொங்கல் தினத்தன்றும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளிலும் மட்டுமே திறந்திருக்கும்.
அதுவும் குறிப்பாக திங்கள்கிழமையன்று இரவு 12 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோயிலின் நடைசாத்தப்படும். இதை சோமவார நிகழ்ச்சி என்ற பெயரில் அப்பகுதியினர் சிறப்பாகக் கொண்டாடுவர். இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை என்பதால் சோம வார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகைதந்து வழிபட்டனர். இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் பரக்கலக்கோட்டை கிராமத்திற்கு சிறப்புப் பேருந்து வசதியை ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!