ETV Bharat / state

நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - Youth killed in bike tree collision

தஞ்சாவூர்:நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
இளைஞர்
author img

By

Published : Oct 29, 2020, 7:09 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்னேரியைச் சேர்ந்தவர் தசரதன் (வயது 26). இவர் திருச்சி, திருவெறும்பூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு (அக்.29) பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் திரும்பியபோது திருக்காட்டுப்பள்ளி, மஹாதேவபுரம் கல்லறைப் பாதை அருகே எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தசரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தோகூர் காவல் துறையில் இளங்கோவன் புகாரளித்தார்.

தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி, காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.