திருவையாறு அடுத்த திருப்பழனம் மெயின்ரோட்டை சேர்ந்த கணேசன் மகன் பிரகாசம் (55). பால் வியாபாரம் செய்துவரும் இவருக்கு வாசுகி என்ற மனைவியும், பிரியவர்ஷன் (13), பிரியங்கா (16) என்ற குழந்தைகளும் உள்ளனர்.
பிரகாசம் மதியம் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பால் வியாபாரம் செய்ய சென்றுள்ளார். அவர் அம்மன்பேட்டை எம்.ஜி.ஆர். திரையரங்கம் அருகே செல்லும்போது திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் லோடு வண்டி எதிர்பாரத விதமாக பிரகாசத்தின் வாகனத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், துணை காவல் ஆய்வாளர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்