தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் மகேஷ் சந்திரன். இவர், தனது மனைவியின் பிரசவத்திற்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து மகேஷ் சந்திரன் வந்துள்ளதால், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்துவருகின்றனர். காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னை இருப்பதால், தற்போது அவரை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள், தற்போது தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!