தேர்தல் பறக்கும்படையினர் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதி கோவிலடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கோவிலடி நோக்கி பைக்கில் வந்த ஒரு நபரைப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது பூதலூர் தாலுகா ஆவாரம்பட்டி புதுக்காலனி தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராஜராஜனிடமிருந்து (32) ஒரு லட்சத்து ஆயிரத்து 520 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.
இவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் அலுவலராகப் பணிபுரிவதாகக் கூறினார். ஆனால் இந்தப் பணத்திற்கான ஆவணங்கள் ஏதுமில்லாததால் பணம் பறிமுதல்செய்யப்பட்டு திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது, பின்னர் வட்டாட்சியர் நெடுஞ்செழியன் பணத்தை எண்ணி கருவூலத்தில் ஒப்படைத்தார்.