தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 10) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதேபகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 57) என்ற முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் சுகுணா முதியவர் செல்லத்துரையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் முதியவரை தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.