தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுசாலிஹ். அவருக்கு வயது 113. மியான்மர் எனப்படும் முந்தைய பர்மாவில் வசித்து வந்த இவர் தனது 50 வயதுக்குப் பிறகு தஞ்சாவூருக்கு வந்துள்ளார். தனது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தஞ்சாவூரில் தனது உழைப்பை மட்டுமே நம்பி சொந்தமாக குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்து, அப்பகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி, தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
மேலும், குறைந்த வருமானமே ஈட்டி வாடகை வீட்டில் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்தமாக வாழ்க்கையை நடத்தி வந்த செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, உடனடியாக தஞ்சை தாசில்தாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், 113 வயது மிட்டாய் தாத்தா அபுசாலிஹ்க்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:
அம்மா... அம்மா... நீ எங்கே அம்மா - டென்மார்க் இளைஞரின் பாசப் போராட்டம்!