ETV Bharat / state

வைகாசி மாத அமாவாசை: கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை! - 9 feet statue

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அமாவாசையை முன்னிட்டு தஞ்சையில் சிறப்பு பூஜை

author img

By

Published : May 19, 2023, 4:27 PM IST

அமாவாசையை முன்னிட்டு தஞ்சையில் சிறப்பு பூஜை

தஞ்சாவூர்: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க அனைத்து ஜீவராசிகளையும் கோடை வெப்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்றும்; தேவையான அளவு நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற பொது பிரார்த்தனையுடனும், திரிசதி மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம ஜெபத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்ற பிறகு பஞ்சாரார்த்தியும் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவரான அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்றும்; வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி இவர் என்பதால் பக்தர்கள் இவருக்கு பிரார்த்தனைகள் செய்து கிரக தோஷம் நீங்க, இவருக்கு வடை மாலை சாத்தியும், கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாத்தியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும்,

தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாத்தியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாத்தியும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பு சாத்தியும் வழிபடுவது போன்ற முக்கிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரை போற்றி வணங்கும் வகையில் கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும்; தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும்,

அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் கடும் கோடை வெப்பம் தணிய வேண்டியும், அனைத்து ஜீவராசிகளையும் கோடை வெப்பத்தில் இருந்து காக்க வேண்டியும், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, இன்று நெல்மணிகள், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, மொச்சை, எள், கோதுமை, கொள்ளு மற்றும் கொண்டக்கடலை என 9 வகை பொருட்கள் அடங்கிய நவதானிய அலங்காரத்தில் 9 அடி உயர விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து திரிசதி மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம ஜெபமும் கூற சிறப்பு பூஜைகளுடன் குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு, பஞ்சார் ஆர்த்தி செய்து, 16 விதமான சோடஷ உபசாரங்களும் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

இத்தலத்தில் ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி அமாவாசை பூஜையில் வைத்து மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள் அதாவது 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 50 வருட பழமையான ஆலமரத்திற்கு உயிர் கொடுத்த தஞ்சை கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.