தஞ்சாவூர் மாவட்டம் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(55). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக சிமி மற்றும் கிளாப்த் ஆகிய தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆட்டுமந்தை தெருவில் கடந்த சில ஆண்டுகளாகச் செருப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது அவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால், ஷேக் அலாவுதீன் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் இருக்கிறாரா என்கிற அடிப்படையில், கொச்சினைச் சேர்ந்த என்ஐஏ அலுவலர்களான டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், ஷேக் அலாவுதீன் விட்டில் சோதனையில் செய்தனர். தொடர்ந்து அவரது செருப்பு கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டு மணிநேர சோதனைக்குப் பிறகு அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், செல்ஃபோன் மற்றும் டைரி ஒன்றை என்ஐஏ அலுவலர்கள் கைப்பற்றினர். இதனையடுத்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திற்கு ஷேக் அலாவுதீனை அழைத்துச் சென்று என்ஐஏ அலுவலர்கள் மாலைவரை விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு: தமிழர் உள்பட 5 பேருக்கு சிறை.!