ETV Bharat / state

ஆடிப்பெருக்கு விழா: திருவையாற்றில் புதுமணத் தம்பதிகள் உற்சாக கொண்டாட்டம் - புதுமண தம்பதிகள்

ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் உற்சாகமாக கொண்டாடி சாமி வழிபாடு செய்தனர்.

aadi perukku
ஆடிப்பெருக்கு விழா
author img

By

Published : Aug 3, 2023, 3:28 PM IST

ஆடிப்பெருக்கு விழா: திருவையாற்றில் புதுமணத் தம்பதிகள் உற்சாக கொண்டாட்டம்

தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் என அனைவரும் புனித நீராடி பழங்கள், காதோலை கருகமணி, மாங்கல்யம் உள்ளிட்டப் பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர்.

பின்னர், பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மஞ்சள் கயிறு அணிவித்து, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆகையால் விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று, காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் தேதி பெண்களின் வழிபாடாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். அதனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட்.3) ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று, பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வார்கள். குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி, தீபாராதனை காண்பித்து பின்பு பழம், அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர்.

மேலும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அந்த நீரால் தானியங்கள் விளைந்து, பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த 'ஆடிப்பெருக்கு விழா' கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தஞ்சாவூரில் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய் புதுஆறு, வடவாறு, வெண்ணாறு ஆகிய இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடினர். மேலும் சிலர் தங்களது வீடுகளில் உள்ள குடிநீர் குழாய், கிணறு ஆகிய இடங்களில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி, சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். தற்போது இந்த ஆண்டு மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால், தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு விழா: பாரம்பரியப்படி மாட்டு வண்டிகளில் கிளம்பிய கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.