ETV Bharat / state

தேசிய மாம்பழ தினத்தை கொண்டாடிய தனியார் பள்ளி மாணவர்கள்

author img

By

Published : Jul 22, 2022, 5:27 PM IST

தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாம்பழ தின கொண்டாட்டம் நடைபெற்றது.

தேசிய மாம்பழ தினத்தை கொண்டாடிய குழந்தைகள்

தஞ்சாவூர்: கோடை கால பழங்களில் ஒன்றான மாம்பழம், பழங்களில் ராஜாவாக போற்றப்படுகிறது. இதன் பூர்வீகம் மியான்மர், வடகிழக்கு இந்தியா, இந்தோனேசியா ஆகும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாம்பழங்கள் இந்தியாவில் விளைவிக்கப்பட்டன. உலகளவில் அதிக இந்தியாவில் ஆண்டிற்கு 20 மில்லியன் டன் மாம்பழங்கள் ஆண்டு தோறும் பயிரிடப்படுகிறது.

அதற்கு அடுத்து இந்தோனேசியா விளங்குகிறது, மாமரங்கள் வகைக்கு ஏற்ப நூறு அடி உயரம் வரை வளரக்கூடியவை, மாம்பழங்களில் 20 தனித்துவமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளது. பங்களாதேஷின் தேசிய மரமாக விளங்குகிறது. இந்த மாமரம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ஆம் நாள், தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை போற்றிடும் வகையில், கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் மாம்பழ தின கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்காண மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மா இலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மாம்பழத்தை பெருமைப்படுத்திடும் வகையில் பிரத்யோக பாடல்களை பாடியும், அதற்கேற்ப ஆடியும் பாடியும் மகிழ்ந்ததுடன், பார்வையாளர் வரிசையில் இருந்த சக மாணவ மாணவியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் கவர்ந்து ரசிக்க வைத்தது.

மேலும், ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி, கிளி மூக்கு, பாதிரி, பச்சையரிசி, நாட்டு உருண்டை, காலாப்பாடி, சிந்து, கேசரி உள்ளிட்ட வகை வகையிலான மாம்பழங்களையும், மாங்காய் மற்றும் மாம்பழத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட மாங்காய் சாதம், மாம்பழசாறு, என திட மற்றும் திரவ உணவு வகைகளையும் காட்சிப்படுத்தியும் அசத்தியிருந்தனர்

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் குடு குடு கிழவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றான மாம்பழம், தாகத்தை தணிப்பதிலும், ஊட்டச்சத்து மிக்க ஒன்றாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க: வெள்ளியை உருக்கி கொட்டியது போல காட்சி தரும் மூலையாறு அருவி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.