இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளும், பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் நாஞ்சில் சம்பத் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பழனிமாணிக்கத்தையும், தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நீலமேகத்தையும் ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அதில் அவர் பேசியதாவது:
உங்களிடம் மன்றாடி யாசகம் கேட்டு வந்திருக்கிறேன். கடந்த 32 ஆண்டு காலமாக தேர்தல் களத்தில் இருக்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் தற்போது எனக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நாட்டு மக்கள் எப்படியாவது மோடியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் நல்ல முடிவுக்கு வந்துவிட்டார்கள். மோடிக்கு ஜாடியாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்ட தமிழ்நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்றார்.