ETV Bharat / state

'கொள்ளையடிப்பதில் அதிமுக LKG; திமுக PhD'- சாட்டை துரைமுருகன் விளாசல்!

author img

By

Published : Dec 15, 2022, 7:26 AM IST

வாரிசு அரசியலை எதிர்த்து அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவில், இன்று வாரிசு அரசியல் கொண்டாடப்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் விமர்சித்துள்ளார்.

கொள்ளையடிப்படில் அதிமுக எல்.கே.ஜி, திமுக பி.எச்டி...! - சாட்டை துரைமுருகன்

தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. மத்திய ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொகுதி செயலாளர் மோ.ஆனந்த், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணி செந்தில், ஹிமாயூன் கபீர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

விழா மேடையில் பேசிய சட்டை துரைமுருகன் "பெண்ணியம், பெரியார் கொள்கைகள் குறித்துப் பேசும் திமுகவில், இன்று உதயநிதி அமைச்சராகப் பதவியேற்புக்கு பின் எடுக்கப்பட்ட நிழல் படத்தில், நிகழ்விற்கு வந்திருந்த ஒரே பெண் அமைச்சருக்கு அமர்வதிற்கு இருக்கை தராதவர்கள் இவர்கள் என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சி என்றைக்கும் பெண்களுக்கு மதிப்பளித்து முக்கியத்துவம் வழங்கும் கட்சி” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெரியார் தனது மனைவியான மணியம்மையை அரசியல் வாரிசாகக் கொண்டு வந்ததை எதிர்த்து 1948ல் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. ஆனால் அந்த இயக்கமே இன்று வாரிசு அரசியலைக் கொண்டாடுகிறது. அதுபோலவே 1992ல் வைகோ, கலைஞர், மு.க.ஸ்டாலினை வாரிசாகக் கொண்டு வருகிறார் என எதிர்த்து குரல் எழுப்பி 13 மாவட்டச் செயலாளர்களுடன் திமுகவை விட்டு வெளியேறியவர் தான் இன்று, தனது மகன் துரை வையாபுரி (எ) துரை வைகோவை அரசியல் வாரிசாகக் கொண்டு வந்துள்ள மானஸ்தர்” என்றார்.

மேலும், "உதயநிதி ஸ்டாலின் பதவியேற்புக்கு பின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உலகத் தரத்தில் மேம்படும் என்றால், அப்போ, இதுவரை இந்த துறை எப்படி இருந்தது ? பிற அமைச்சர்களுக்கு இல்லாத வகையில் சகலவிதமான வசதிகளுடன் உதயநிதியின் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள டிவியின் விலை கூட 10 லட்சம் மதிப்பிலானது. இது குறித்து இதுவரை எந்த நடுநிலையாளர்களும், ஊடகவிலாளர்களும், கேள்வி எழுப்பவில்லை.

இந்த ஆட்சியில் தலைமை செயலாளர் இறையன்புவும், சட்டம் ஒழுங்கு டிஜிபியான சைலேந்திர பாபும் தான் நேர்மையானவர்கள். அவர்களை திமுக ஆட்சியில் நியமனம் செய்திருப்பதன் காரணம் அவர்களது பங்கு தொகையும் தங்களது திமுக கிடங்கிற்கே வருமே என்ற நோக்கம் தான். அதிமுகவினர் கொள்ளையடிப்பதில், எல்கேஜி முடித்தவர்கள் ஆனால் திமுகவோ பிஎச்டி முடித்தவர்கள். அதிமுக ஆட்சியில் 30 சதவீதமாக இருந்த கமிஷன் தற்போது திமுக ஆட்சியில் இது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு கல்லூரி தொடங்க 4 கோடியும், பள்ளி தொடங்க ஒரு கோடியும் கமிஷனாக தலைமைக்குச் செல்கிறது. இன்னும் ஏன், ஒரு சிறையிலிருந்து கூட மாதம் ஒரு கோடி வரை மாமூல் செல்கிறது தமிழகத்தில் 24 சிறைச்சாலைகள் இருக்கிறது என்றால் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு அமைச்சர்; 'இனிதான் தெரிய வரும்..' - பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.