தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தை அடுத்த பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இராசா மிராசுதார் மருத்துவமனையும், நாம் தமிழர் கட்சியும் இணைந்து நடத்திய இந்த முகாமை அக்கட்சியின் பாபநாசம் தொகுதி செயலாளர் தூயவன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அக்கட்சியின் சார்பில் தொண்டர்கள் தமிழ்த் தேசியம் காப்போம், தமிழர் உரிமையைக் காப்போம் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன்கபீர், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் மணி, மருத்துவமனையின் மருத்துவர் ஜெயகார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.