ETV Bharat / state

‘தாயிற் சிறந்த கோயில் இல்லை’ - தாயின் ஆசையை நிறைவேற்றும் தியாகமகன்

author img

By

Published : Dec 19, 2022, 5:48 PM IST

தனது வயது முதிர்ந்த தாயின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் மகன் இன்று தஞ்சையில் உள்ள கோயில்களைக் காண வந்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
தாயின் ஆசையை நிறைவேற்றும் தியாகமகன்

தஞ்சாவூர்: கர்நாடக மாநிலம், மைசூரூவைச் சேர்ந்தவர், தெட்சணாமூர்த்தி - சூடா ரத்தனம்மாள் (72) தம்பதி. இதில் தெட்சணாமூர்த்தி கர்நாடக மாநில அரசுப் பணியில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர்களது ஒரே மகன் கிருஷ்ணகுமார் (44). இவர்களது குடும்பம் இவர்கள் மூவர் தான் என்ற போதும், தெட்சணாமூர்த்திக்கு தனது தங்கை மீது அதிக பாசம் கொண்டிருந்ததால், அவர்களுடைய குடும்பமும் இவர்களுன் சேர்ந்த கூட்டுக்குடும்பமாக பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்தனர்.

பட்டதாரியான கிருஷ்ணகுமார் பெங்களுரூவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். கூட்டுக்குடும்பம் என்பதால், திருமணம் முடித்து வந்ததில் இருந்து சூடா ரத்தினம்மாளுக்கு, வீட்டின் சமையல் கட்டை தவிர வேறு எங்கும் செல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை.

இதற்கிடையே, கடந்த 2005ஆம் ஆண்டு தெட்சணாமூர்த்தி பணி ஓய்வுபெற்றார். கால ஓட்டத்தில் கூட்டுக்குடும்பம் சுருங்கி தந்தை, தாய், மகன் என வாழ்ந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தந்தை உயிரிழந்தார். இதனால், மகன் கிருஷ்ணகுமார் பணி நியமித்தம் காரணமாக பெங்களூருவில் இருந்தார். தாய் சூடா ரத்தனம்மாள் தனியாக இருந்தது, அவரது மகனுக்கும் பெரும் துன்பமாக இருந்துள்ளது.

இதனை ஒருநாள் உணவருந்தும் போது, தன் தாயுடன் மகன் பேசுகையில், ’நீங்கள் திருவண்ணாமலை, திருவரங்கம் எல்லாம் போய் தரிசனம் செய்திருக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பியபோது, ’நான் அருகில் உள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு கூட சென்றதில்லை’ எனக் கூறியுள்ளார். அப்போது, அவரது முகபாவங்களைக் கண்டு அதிர்ச்சியும், துயரும் உற்ற மகன் கிருஷ்ணகுமார், அருகில் உள்ள கோயில்கள் மட்டுமல்ல, பாரத தேசம் முழுவதும் உள்ள கோயில்களையும் தான் அழைத்துச்சென்று தரிசனம் செய்ய வைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், ’கடந்த 2018 ஜனவரி 14ஆம் தேதி, வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியமல்ல, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும், குறிப்பாக நம் பெற்றோரை, அவர்கள் வாழும் காலத்தில் அதிலும் வயோதிக காலத்தில் மகிழ்வோடு நம்மோடு வைத்திருக்க வேண்டும்’ என்னும் நோக்கில், தனது 13 ஆண்டு கால ஐடி பணியை விட்டு விலகி, 2018 ஜனவரி 16ஆம் தேதி, தனது தந்தை தனக்கு ஆசையாக 21 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கித்தந்த இருசக்கர வாகனத்தில், ’மாத்ரூ சேவா சங்கல்ப யாத்ரா’ என்ற பெயரில் பயணம் மைசூரில் இருந்து தனது தாய் சூடா ரத்தனம்மாளுடன் (72) பயணம் தொடங்கினார்.

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு, சட்டீஸ்கர், பூட்டான், நேபாளம், மியான்மார் என 2 ஆண்டுகள் 9 மாதங்களில் 56 ஆயிரம் கி.மீ., நிறைவு செய்தபோது கரோனா பெருந்தொற்று ஏற்பட்டு கோயில்கள் அடைக்கப்பட்டதன் காரணமாக 2020 செப்டம்பர் மாதம் நேபாளம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சாலை மார்க்கமாக பயணப்பட உரிய அனுமதிச் சீட்டு பெற்று பயணித்துள்ளார். ஏழு நாள்களில் 2ஆயிரத்து 673 கி.மீ., பயணம் செய்து மீண்டும் மைசூரில் உள்ள தங்களது சொந்த வீட்டிற்குத் திரும்பினார்.

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் மீண்டும் மைசூருவில் தனது தாயுடன் இரண்டாம் கட்ட பயணத்தில் நேற்று கும்பகோணம் வந்தடைந்தார், கிருஷ்ணகுமார். அங்குள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயில், சக்ரபாணி கோயில், சாரங்கபாணி கோயில், மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரமகுருவான விஜேயந்திர தீர்த்த சுவாமிகள் மடத்திற்கு வந்து தரிசனம் செய்தனர். இன்று வரை 03 ஆண்டுகள் ஒன்றரை மாதங்களில் 61 ஆயிரத்து 786 கி.மீ., பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயிலாடுதுறை, புவனகிரி, புதுச்சேரி மார்க்கமாக தங்கள் பயணம் தொடர திட்டமிட்டுள்ளனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணுவர்தனை போலவே சிறுவயது முதல் தமிழ் நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோர் படங்களை அதிகம் பார்த்து தமிழ் கற்றுக்கொண்டேன் என்றும்; பராசக்தி, பாசமலர் போலவே என் தாய் மீது அதிகம் பாசம் கொண்டவராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார், கிருஷ்ணகுமார். மேலும் ரஜினிகாந்த் நடித்த, அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற பாடல் காட்சியினையும்; உலகநாயகன் கமல்ஹாசனின் பெயர் சொல்லும் பிள்ளை உள்ளிட்டப் பல படங்களை பார்த்து ரசித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளேன் எனவும் அவர் கூறினார். மேலும், அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய அவசர உலகில், பணம், பதவி வெளிநாட்டில் பணி இறக்கை கட்டி பறக்கும் இளைய தலைமுறையினர், வயதான தங்களது பெற்றோரை கவனிக்க முடியாமல், தனியார் நிறுவன பாதுகாப்பு இடங்களில் முதியோர் காப்பகங்களில் தங்க வைத்தும், சிலர் அவர்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் தங்களது வாழ்க்கையை மட்டும் பார்த்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், தனது தாயின் ஆசையைப் பூர்த்தி செய்ய, தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் வகையில் அவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் கிருஷ்ணகுமார் போன்ற மகன்கள் உலகின் எங்கோ ஒரு மூலையில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவரையும், இவரைப் போன்றோர்களையும் போற்றுவதையும், வாழ்த்துவதையும் நம் கடமையாக கொள்வோம்.

இதையும் படிங்க: மண் மணம் வீசும் மண்பானைகளுக்கு வெளிநாட்டில் அதிகரிக்கும் மவுசு; மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.