இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு உரையாற்றியனார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காவிரி டெல்டா பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல் பேசி வருவது கண்டனத்துக்குரியது.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்க வேண்டும் என்ற முன்னெடுப்பு நடைமுறைகளை செய்யும் இந்த அரசு, விவசாயிகள் பாதிக்காதவாறு நெல் கொள்முதலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்கவில்லை.
திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக் கூடாது என்பதற்காக செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்தரசன், 'காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்ததற்கு தங்களைத் தாங்களே பாராட்டும் வகையில், நாகையில் விவசாயிகள் சார்பில் கூட்டம் நடைபெறுவதாகவும், இதில் முதலமைச்சர் கலந்து கொள்வதாகவும் கூறப்படுவது வேடிக்கையாக உள்ளது' என்றும் கூறினார்.
இதையும் பார்க்க: 'டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாறும்' - அமைச்சர் காமராஜ் உறுதி