பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட அளவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், பிரிவு வாரியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் அடுத்ததாக நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கக்கட்டி விற்பனை - நூதன முறையில் ரூ. 40 லட்சம் கொள்ளை!