தஞ்சை அடுத்த மானோஜிபட்டியைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்பது பேர் அருகில் உள்ள ஆற்றில் நேற்று (அக்.11) மாலை குளிக்கச் சென்றனர். அப்போது,எதிர்பாராதவிதமாக ஹரிஷ், ரித்தீஸ் ஆகிய இரண்டு மாணவர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் கரையேறிய நிலையில் உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து அனைவரும் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர்.
எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி இருபுறமும் மாணவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் உறவினர்களும், நண்பர்களும் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: