ETV Bharat / state

அமைச்சர் நிகழ்ச்சிக்காக கூரை வீடு துணியால் மறைக்கப்பட்டதா? - thanjavur news

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் நிகழ்ச்சிக்காக கூரை வீடு துணியால் மறைக்கப்பட்டதா?

author img

By

Published : Apr 27, 2023, 8:29 PM IST

அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

தஞ்சாவூர்: பூதலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆனந்த காவிரி வாய்க்காலில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “டெல்டா மாவட்டங்கள் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன ஆதாரங்களை தூர்வாரிட, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பில் 636 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள உள்ளன. மேலும், தஞ்சை மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் 189 பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

பாசனக்காரர்கள் சபையும் மகிழத்தக்க வகையில், தூர்வாரும் பணிகள் அமையும். பொதுப்பணித்துறையின் மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தூர்வாரும் பணிகள் நிதியினை நிதி அமைச்சர் ஒதுக்கி உள்ளார். காரணம், மழை, வெள்ளம் காலங்களில் பாதிப்பு இல்லாமல், கடைமடை வரை தடை இன்றி தண்ணீர் போக வேண்டும் என்பதற்காகத்தான்.

கர்நாடக அரசிடம் இருந்து உரிய நீர் பங்கீடு பெறப்படுகிறது. பவானி ஆற்றில் தரையில் சிமென்ட் தளம் அமைக்கப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயியாக நான் உணர்கிறேன். தஞ்சை மாவட்டம் கல்லணை கால்வாயில், கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து தூர்வாரும் பணி எப்போது முடியும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தூர்வாரிய இடத்திலேயே முடியும்” எனக் கூறினார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு எதிராக குடிசை வீடு காணப்பட்டது. இதனையடுத்து, அந்த வீடு திரை மறைப்பு போட்டு மறைத்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமித்ஷாவுடனான ஈபிஎஸ் சந்திப்பு; அண்ணாமலை பங்கேற்பு; பின்னணி என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.