தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீரானது ராஜகோபுரம், மூல கோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் ஊற்றி கோலாகலமாக நடத்தப்பட்டது. இதற்காக தொல்லியல் துறையினர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு இருந்தனர். இந்தக் கோயிலில் சோழர் காலத்துக்குப் பின் நாயக்கர்கள் கால ஆட்சி நடத்தப்பட்டது.
அதன்பின் மராட்டிய மன்னர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை முழுவதும் ஆட்சி செய்து வந்தநிலையில், தற்போது அரண்மனை தேவஸ்தானத்தை தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
குடமுழுக்கு விழாவில் யாக சாலைகள் தொடங்கியதிலிருந்து மராட்டிய மன்னர் வாரிசான ராஜா போன்ஸ்லே பாபாஜி குடும்பத்தினர் இருந்துவந்தனர். குடமுழுக்கு விழாவில் இவர்களுக்கு விவிஐபி தரிசனத்தில் 30 மேற்பட்ட மராட்டிய மன்னர் குடும்பத்தினர் பங்கு பெற்றனர்.
இதையும் படிங்க: குருப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலி: பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் இடைநீக்கம்