தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க லாரி ஓட்டுநர் ஒருவர், சென்னை குரோம்பேட்டையில் குடிநீர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 22ஆம் தேதி இவர், தனது நண்பரின் லாரி மூலம் கும்பகோணம் வந்தடைந்தார். தொடர்ந்து தனது சகோதரருடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் விளாங்குடிக்கு வந்தடைந்தார். அப்போது அங்கிருந்த சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விளாங்குடி பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84ஆக இருந்து வந்தது. இதில் 67 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 17 பேர் தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை!