ETV Bharat / state

மதுபானக் கடைகளுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள்! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

மதுபானக் கடைகளுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள்

author img

By

Published : May 7, 2020, 11:45 PM IST

Updated : May 16, 2020, 8:46 PM IST

கரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. அதேபோல் திருவையாறு வட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டு, கடைகளிலேயே மதுபாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் மது கிடைக்காத ஒருசில மதுப் பிரியர்கள் பூட்டியிருந்த டாஸ்மாக் விற்பனையகங்களில் கைவரிசையைக் காட்டி மதுபான பாட்டில்களை திருடி செல்லும் நிகழ்வுகள் அரங்கேறின. அதனைத் தொடர்ந்து அவற்றை பாதுகாக்கும் பொருட்டு திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

மதுபானக் கடைகளுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள்
மதுபானக் கடைகளுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள்

இந்நிலையில், மூன்றாம் கட்ட நீட்டிப்பிற்குப் பிறகு ஒருசில தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகளும் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் இன்று (மே 7) தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் காவல் துறை முன்னிலையில் கதவுகளில் வைத்திருந்த சீல்கள் உடைக்கப்பட்டு, முழு பாதுகாப்புடன் மதுபான கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

Last Updated : May 16, 2020, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.