ETV Bharat / state

சாதனைக்கு ஏது வயது..! 'குண்டான் சட்டி' அனிமேஷன் படத்தை உருவாக்கிய தஞ்சை சிறுமி!

"குண்டான் சட்டி" என்ற அனிமேஷன் படத்தை இயக்கி சாதனைப் படைத்த கும்பகோணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பி.கே.அகஸ்தியின் கலை பயணத்தை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 18, 2023, 12:33 PM IST

12 வயதில் 'குண்டான் சட்டி' அனிமேஷன் படத்தை இயக்கி சாதித்த பி.கே.அகஸ்தி!

தஞ்சாவூர்: ஓராண்டு மட்டும் ஆன்லைன் வாயிலாக அனிமேஷன் பயிற்சி பெற்று, துணிச்சலுடன் தனி ஆளாக குண்டான் சட்டி எனும் 2 மணி நேர அனிமேஷன் திரைப்படம் இயக்கி, 7ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே பி.கே.அகஸ்தியின் சாதித்துக் காட்டியுள்ளார். இவரின் சாதனை தமிழ், இந்திய சினிமா துறையில் உள்ளவர்களை மட்டுமில்லாமல் உலக சினிமா வரலாற்றில் உள்ள திரைத்துறை ஜாம்பவான்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மாணவி பி.கே.அகஸ்தியின் கலைப்பயணம் குறித்த ஓர் செய்தித் தொகுப்பை இங்கு காணலாம்.

பொதுவாக, பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற வந்த பிறகு, சிறுவர் சிறுமியர்கள் டிவியில் திரைப்படம் பார்த்து ரசிப்பது, அலைபேசியில் பலவிதமான விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வது, வீடியோக்கள் பார்ப்பது, சிறுகதைகளைப் பிற கூற கேட்பது, அவ்வப்போது படிப்பதும் என தங்களது பொழுதை களிப்பது வாடிக்கை.

கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது, சில வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வந்தன. அப்போது பிற குழந்தைகளிலிருந்து சற்று மாறுபட்டவராக, பிற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அப்பாற்பட்டு, கல்வி மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருபவர், பள்ளி மாணவி பி.கே.அகஸ்தி.

'குண்டான் சட்டி' அனிமேஷன் படத்தை இயக்கி சாதித்த மாணவி பி.கே.அகஸ்தி!

கும்பகோணத்தை சேர்ந்த கார்த்திகேயன் - பூர்ணிமா தம்பதியினரின் இளைய மகளான 12 வயதேயான இவர், கும்பகோணத்தில் உள்ள தனியார் இண்டர்நேஷனல் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிபடுத்தியோடு, சான்றிதழ்களையும் பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். கரோனா காலகட்டத்தில், அதிகமான புத்தகங்கள் படித்தும், அதிலும், கார்டூன்கள் குறித்த அனிமேஷன் புத்தகங்கள் என எண்ணற்ற புத்தகங்களைக் கரைத்துக் குடித்து அந்த தாக்கத்தின் எதிரொலியாக, அது குறித்த ஓர் புத்தகம் எழுத வேண்டும் என்ற அவா எழுந்தது.

கரோனா காலகட்டத்தை அதிகமான புத்தகங்களை படிப்பதிலும் அதிலும் குறிப்பாக, கார்டூகள் குறித்த அனிமேஷன் புத்தகங்களை தேடி ஆர்வத்துடன் படித்துள்ளார். இதனையடுத்து தான் படித்த கார்ட்டூன் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு தானே ஒரு கதையை புத்தகமாக எழுத ஆரம்பித்துள்ளார். இருப்பினும், டிஜிட்டலாக மாறிய இந்த நவீன காலகட்டத்தில் அனைவரிடமும் புத்தக வாசிக்கும் பழக்கத்தை விட, வீடியோவாக வெளியிட வேண்டும் என்று சாமர்த்தியமாக யோசித்துள்ளார்.

மாணவி பி.கே.அகஸ்தி இயக்கிய  'குண்டான் சட்டி' அனிமேஷன் படம்

இதன் விளைவாகவே, தனது புத்தகத்தை திரைப்படமாக இயக்கக்கூடாது என்ற எண்ணம் அவரது மனதில் துளர்விட, அதனை தன் பெற்றோரிடம் எடுத்து வைத்துள்ளார். அதற்கு முதலில் மகளின் ஆசையைக் கண்டு முதலில் மலைத்துப்போய் திகைத்து நின்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது கனவை சிதைக்க விரும்பாமல், தனக்கென 'குண்டான் சட்டி' என வித்தியாசமான பெயர் சூட்டி யூடியூப் சேனல் தொடங்கி அதில் வெற்றி கொடி நாட்டிய தங்களது மகளின் விடாமுயற்சியையும் உழைப்பையும் அதற்கு கிடைத்த வெற்றியையும் கண்ட அவரது பெற்றோர் தங்களின் முடிவைப் பின்னர் மாற்றிக்கொண்டனர்.

இந்த சிறிய வயதில், திரைத்துறையில் சாதிக்க நாம் ஏன் அவளுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது என முடிவு செய்து அகஸ்தி திட்டமிட்டிருந்த 'குண்டான் சட்டி' என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படத்திற்கு பச்சை கொடி காட்டினர். இதையடுத்து, கடந்த 2022ஆண்டு இதற்கான பூர்வாங்க பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியதோடு, அவரது தந்தை கார்த்திகேயனே அப்படத்திற்கு தயாரிப்பாளராக தடம் பதித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த சிறுவயதில் திரைத்துறையில் சாதிக்க நாம் ஏன் அவளுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது என முடிவு செய்து அகஸ்தி திட்டமிட்டிருந்த 'குண்டான் சட்டி' என்ற பெயரிலான அனிமேஷன் திரைப்படத்திற்குப் பச்சை கொடி காட்ட, கடந்த ஆண்டு இதற்கான பூர்வாங்க பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியது, தந்தை கார்த்திகேயனே தயாரிப்பாளராகத் தடம் பதித்தார்.

தற்போது தமிழ் திரையுலகிற்கு 12 வயது பள்ளி மாணவி அகஸ்தி, குண்டான் சட்டி அனிமேஷன் திரைப்பட வாயிலாக, இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். தமிழ்நாடு, இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமின்றி சர்வதேச அளவில் சாதனை மாணவியாகத் திகழ்ந்து வருகிறார். இவரது கதைக்கு திட்டமிட்டபடியே 'குண்டான் - சட்டி' எனப் பெயரிட்டனர். அவர் வசித்து வரும் கொரநாட்டு கருப்பூரில் வாழ்ந்து வந்த ஒரு தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் பிறக்கின்றனர் இந்த சகோதரர்கள் குண்டான், சட்டி போன்ற ஒரு வித்தியாசமான தோற்றத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக பிறந்து வளர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குண்டேஸ்வரன் மற்றும் சட்டிஸ்வரன் என பெற்றோர் பெயரிடுகின்றனர். இவர்களை குண்டான் என்றும் சட்டி என்றும் ஊர் மக்கள் அழைத்ததால் இந்த கதைக்கு குண்டான் - சட்டி எனப் பெயரிட்டுள்ளனர்.

மாணவி பி.கே.அகஸ்தி இயக்கிய  'குண்டான் சட்டி' அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் விழா

இந்த கிராமத்தில் அதிக வட்டி வசூலிக்கும் பண்ணையார் வடநாட்டை சேர்ந்த மார்வாடி மற்றும் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் வியாபாரி ஆகியோரை தங்களது திறமையால் ஏமாற்றுகின்றனர். இதேபோல, அக்கிராம மக்களின் மக்கள் குறைகளைப் போக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது பெற்றோரிடம் புகார் தெரிவிக்க, அவர்களது பெற்றோர், குண்டேஸ்வரனையும் சட்டிஸ்வரனையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றில் விட்டுள்ளனர்.

இதன் பிறகு இவர்களின் நிலை என்ன? என்ன நடக்கிறது? என்பதுதான் மீதி கதை. குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கின்றனர், குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடமும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது போன்ற சிறு சிறு விஷயங்களையும் இயல்பாகவும் சிறப்பாகவும் இந்த திரைப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார், மாணவி அகஸ்தி. இது மாணவ மாணவியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினருக்குமான திரைப்படமாக வெளி வரவுள்ளது. அரங்கன் சின்னத்தம்பி திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்.அமர்கித் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இப்படத்திற்கான போஸ்ட் புரோக்டஷன் எனும் இறுதிக்கட்ட வேலைகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன. ஏற்கனவே, கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர்கள் சங்கர், லிங்குசாமி, நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் தியாகு வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் எண்ணற்றோர் நிலையில், வரும் காலத்தில் அகஸ்தியும் கண்டிப்பாக அந்த வரிசையில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. வரும் காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவேன் என்றும் உறுதியோடு மாணவி அகஸ்தி தெரிவித்துள்ளார்.

இவர் ஒராண்டு மட்டும் ஆன்லைன் வாயிலாக அனிமேஷன் பயிற்சி பெற்று, தனி ஆளாக குண்டான் சட்டி எனும் 2 மணி நேர அனிமேஷன் திரைப்படம் இயக்கியுள்ளார் என்பதும் 7ஆம் வகுப்பு மாணவியா, இவ்வாறு துணிச்சலுடன் தனி ஆளாக உலக திரைப்பட வரலாற்றில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அனிமேஷன் படத்தை இயக்கி சாதனைப் படைத்த 12 வயது சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.