ETV Bharat / state

விமரிசையாக நடைபெற்ற கும்பகோணம் சிவன் கோயில் மாசிமக விழா!

தஞ்சாவூர்: கும்பகோணம் சிவாலயங்களில் நடைபெற்ற மகவிழா ஓலைச் சப்பரம் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் சிவன் கோயில் மாசிமக விழா
கும்பகோணம் சிவன் கோயில் மாசிமக விழா
author img

By

Published : Mar 5, 2020, 9:33 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆறு சிவாலயங்களில் வரும் மார்ச் 8ஆம் தேதி மாசிமகப் பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி சிவாலயங்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் ஆலயம், ஸ்ரீவியாழ சோமேஸ்வரர், ஸ்ரீகாசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓலைச் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினார்கள்.

கும்பகோணம் சிவன் கோயில் மாசிமக விழா

பின்னர், மங்கள இசையுடன் அனைத்து ஆலயங்களின் ஓலைச் சப்பரங்கள் திருவீதியுலாவாக வந்து உச்சிபிள்ளையார் கோயில் அருகே சங்கமித்தனர். மாசிமக விழா ஓலைச் சப்பரம் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.