தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று(செப்.27) அதிகாலை இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கும்பகோணத்தில் 101 மி.மீ மழை பதிவானது.
இதனால் கல்லூர், கடிச்சம்பாடி, திருநல்லூர், அகராத்தூர், வாளாபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 600 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு 2 வாரங்களுக்கு முன்பே பயிர்கள் நடப்பட்டன. ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் இப்போது நஷ்டத்துடன் இருக்கிறோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ஃபார்மாலிட்டியாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் - கடுப்பாகி கிளம்பிய அமைச்சர் மா.சு