தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாலாஜி, ஜோசப் ஆரோக் ஆஸ்டின், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பேராசிரியர் சதிஷ்குமார் தலைமையில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் பாதுகாப்பு என்பது மிக முக்கிய காரணியாக உள்ளது. அதை மனதில் கொண்டு மாணவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து உள்ளனர். முதல் கட்டமாக இந்த இயந்திரமானது கல்லூரி வளாகத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது.
தற்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூன்று எந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு இயந்திரத்தை தயாரிக்க ஆகும் செலவு ரூபாய் 950 மட்டுமே. குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது.
இதைக் கண்டுப்பிடித்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், இயந்திரவியல் துறைத்தலைவர் சுந்தர செல்வன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய கருவி - சென்னை பொறியியல் மாணவர்கள் அசத்தல்!