சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ பி நட்டா வெள்ளிக்கிழமை திட்டக்குடி, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். பின்னர், துறைமுகத்தில் பேரணி ஒன்றையும் நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் அவர், அங்கு பாஜக உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டைப் போன்று கேரளத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம், மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை எதிர்க்கட்சியான திமுக- காங்கிரஸ் ஓரணியாகவும், ஆளுங்கட்சியான அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவின் வானதி சீனிவாசன் களம் காண்கிறார்.