ETV Bharat / state

’இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான்’ - இஸ்ரோ இணை இயக்குநர் ரெங்கநாதன் - அமைச்சர் அன்புமணி

தஞ்சாவூர்: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு நடந்த கண்காட்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ எஸ்பிபியின் இணை இயக்குநர் ரெங்கநாதன், இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான்தான் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

இஸ்ரோ இணை இயக்குனர் ரெங்கநாதன்
author img

By

Published : Oct 10, 2019, 10:12 AM IST

கடந்த நான்காம் தேதி முதல் தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உலக விண்வெளி வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை, அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இஸ்ரோ எஸ்பிபியின் இணை இயக்குநர் ரெங்கநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் பாலமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு கருவிகளும் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனைச் சுற்று வட்டாரத்திலிருந்து பல்வேறு பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இஸ்ரோ இணை இயக்குனர் ரெங்கநாதன் பேட்டி

இந்நிகழ்வில் பேசிய அவர், ”இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான். 2022ஆம் ஆண்டுக்குள் அந்தத் திட்டத்தின் மூலம் இந்தியர் மூவரை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறோம். தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. விண்வெளி ஆய்வால் பல்வேறு துறைக்கும் எல்லையில்லா சேவை புரிவதுதான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும்” என்றார்.

மேலும் அன்பழகன், இந்தக் கண்காட்சியைப் பார்க்க மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தர வேண்டும் என்று இஸ்ரோ இணை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்க:

'விக்ரமுடன் இனி தொடர்பில்லை... எங்களது அடுத்த டார்கெட் ககன்யான்தான்!' - சிவன் உற்சாகம்

Intro:தஞ்சாவூர் அக் 09

அரசு பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஐ எஸ் ஆர் ஓ எஸ்பிபி யின் இணை இயக்குனர் ரெங்கநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்Body:.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஐ எஸ் ஆர் ஓ எஸ்பிபி யின் இணை இயக்குனர் ரெங்கநாதன் நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி கலந்து கொண்டு பேசுகையில் உலக விண்வெளி வரம் கடந்த 4ஆம் தேதி முதல் நாளை வரை நடைபெறுகிறது உலக விண்வெளி வாரம் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என 3 மாநிலங்களில் நடைபெறுகிறது தமிழகத்தில் சென்னை கும்பகோணம் கோபிசெட்டிபாளையம் திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் நடைபெறுகிறது விண்வெளி ஆய்வு என்பது சாதாரண அன்றாட மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்ற தவறான கருத்து நிலவுகிறது அது அப்படியல்ல கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களின் உடல் வெப்பத்தைக் கூட துல்லியமாக நம் விண்வெளிக்கல செயல்பாட்டின் மூலம் அறிய முடியும் கடலின் எப்பகுதியில் மீன் வளம் மிகுந்துள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க முடியுமா நாட்டின் பயிர் வளம் எப்படி உள்ளது எப்பகுதியில் எந்த தானியம் எவ்வளவு மகசூல் அளிக்கும் என்பதை கூட கணித்து அரசினருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியும் இப்படியாக பல்வேறு துறைக்கும் எல்லை இல்லா சேவை புரிவலுதான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார். அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கண்காட்சியில் விண்வெளிக் கழகத்தின் உபகரணங்கள் சாதனங்கள் அயோத்தி காட்சி படுத்தியிருந்தனர் இதனை அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். இணை இயக்குனர் ரெங்கநாதன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்த போது
இஸ்ரோவின் அடுத்த திட்டம் தகன்யா எனப்படும் 3 இந்தியர்களை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு 2022ம் ஆண்டு அனுப்பு இருப்பதாகவும் ரங்கநாதன் தெரிவித்தார். தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளது என்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில் விண்வெளி வார விழா கண்காட்சி இரண்டு நாள் போதாது மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து எல்லா பள்ளி மாணவ மாணவிகள் பார்ப்பதற்கு அவகாசம் தர வேண்டும் என்று இஸ்ரேலின் இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் திருநாவுக்கரசு கல்லூரி முதல்வர் பாலமுருகன் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.