தஞ்சாவூரில் அரசு ஐடிஐ (தொழிற்பயிற்சி) மையத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் மாணவர்களின் கற்றல் குறித்த ஆய்வு செய்தார். முன்னதாக ஐடிஐ முதல்வரிடம் மாணவர்களின் சேர்க்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி விகிதம் எவ்வாறு உள்ளது என்பதைக் கேட்டறிந்து அதில் அதிருப்தி அடைந்து ’மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ள ட்ரேடில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல் மாணவர்கள் அதிகமாக உள்ள ட்ரேடில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐடிஐ செயல்பாடுகள் very very poor performance. not satisfied.
அது குறித்து கடிதம் அனுப்பினீர்களா?’ என ஐடிஐ முதல்வரிடம் கேள்விகளைக் கேட்டு உடனடியாக கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்குமாறும்; எந்தெந்த கோர்ஸ்க்கு மாணவர்கள் வரவில்லையோ அது குறித்தும் எதில் மாணவர்கள் அதிகமாக வருகிறார்களோ அது குறித்தும் அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பவும் என கடுமையாக உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், ஐடிஐ முதல்வர் சீராளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுக ஏற்காது: அமைச்சர்