தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சிஎம்பி தெருவிலுள்ள பள்ளிவாசலில் இந்தோனேசியா, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து 32 பேர் வந்து தங்கியுள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் அரசு அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இந்தோனேசியா வந்தவர்கள் 12 பேர், கொல்கத்தா, பெங்களூருவில் இருந்து வந்தவர்கள் 20 பேர் என மொத்தம் 32 பேர் அங்கு இருந்தது தெரியவந்தது. இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 15 தினங்களுக்கு முன்னர் வந்ததும், கடந்த 23ஆம் தேதி அதிராம்பட்டினத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த 32 பேரையும் தனிமைப்படுத்திய சுகாதாரத் துறையினர், அவர்களது கைகளில் முத்திரை குத்தினர். மேலும், அவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: சுற்றித்திருந்த வங்கதேச இளைஞர்: மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள்!