ETV Bharat / state

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Student died incident in Thanjavur: தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் காற்றுடன் கூடிய பலத்த மழையால் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதில் பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார். இந்நிகழ்விற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி மரணம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 11:44 AM IST

தஞ்சாவூர்: அய்யம்பேட்டையில் சுறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையில் தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி மரணம்

அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், பத்மா தம்பதியினர். இவர்களது மூத்த மகள் சுஷ்மிதா சென் (வயது 15). கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோயிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட். 30) அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் சுஷ்மிதா சென்னும், ராஜேஸ்வரியும் வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் இரண்டு மாணவிகளும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இருவரையும் உடனடியாக பள்ளி நிர்வாகிகள் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுஷ்மிதாசென் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதை அடுத்து இறந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதி கோயில் கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த சுஷ்மிதாசென், த/பெ செந்தில்குமார் (வயது 15).

பாபநாசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி, த/பெ கந்தன் (வயது 15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29.8.2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மாணவி சுஷ்மிதா சென்-னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் மாணவி சுஷ்மிதா சென் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி இராஜேஸ்வரிக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கட்சி கொள்கைக்கு சங்கடம் ஏற்படுத்திடாத வகையில் மேயர் செயல்பட வேண்டும் - கும்பகோணம் துணை மேயர் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.