ETV Bharat / state

கஜா புயலில் சேதமடைந்த திசைகாட்டும் பலகைகள் சீர் செய்யப்படுமா? - தஞ்சை மக்கள் பாதிப்பு

தஞ்சை: கஜா புயலின் போது சேதமான திசை மற்றும் தூரம் காட்டும் பலகைகள் இன்னும் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கஜா புயலில் சேதமடைந்த திசை காட்டும் சீர் செய்யப்படுமா?
author img

By

Published : May 11, 2019, 6:32 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சாலைகளில் அமைக்கப்பட்ட பெயர் மற்றும் திசை காட்டும் பலகைகள் சாய்ந்து விழுந்தன. மேலும் பைபாஸ் சாலைகளில் அமைக்கப்பட்ட தூரம் காட்டும் பலகைகளும் விழுந்து சேதமடைந்தன.

இப்பகுதி மக்கள் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு ஏழு மாதங்கள் ஆகியும், திசை, தூரம் காட்டும் பலகைகள் சேதம் அடைந்ததை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், பைபாஸ் சாலையில் வரும் கனரக வாகனங்கள் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுகின்றன. இதனால் குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல முடியாமல் வேறு பகுதிக்குச் மாற்றி சென்று விடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமான திசைகாட்டும் பலகைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

கஜா புயலில் சேதமடைந்த திசை காட்டும் பலகைகள் சீர் செய்யப்படுமா?

Intro:கஜா புயலின் போது சேதமான திசை காட்டும் மற்றும் தூரம் காட்டும் பலகைகளை சீரமைக்க கோரிக்கை

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த கஜா புயல் பாதிப்பால் நகர் பகுதியின் மையத்தில் பல சேதங்களை ஏற்படுத்தியது. இதில் ஒவ்வொரு சாலையிலும் அமைக்கப்பட்ட பெயர் பலகை மற்றும் திசைகாட்டும் பலகை ஆகியவை முறிந்து விழுந்தன. மேலும் பைபாஸ் சாலைகளில் அமைக்கப்பட்ட தூரம் காட்டும் போர்டுகளும் முறிந்து விழுந்து சேதமாகின. இதனால் தற்போது ஓரளவு புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நிலையில் இந்த திசைகாட்டும் தூரம் காட்டும் பலகைகள் மட்டும் இன்னும் சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பைபாஸ் சாலையில் வரும் கனரக வாகனங்கள் எந்த பகுதிக்கு அதாவது எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல முடியாமல் வேறு பகுதிக்குச் செல்ல நேரிடுகிறது. அப்போது நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதையடுத்து வழக்கமாக வரும் பேருந்துகளும் போக்குவரத்து இடையூறுகளால் பாதிக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் ஆகிவிடுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமான திசைகாட்டும் பலகைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.