ETV Bharat / state

பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணாக்கர்கள்! - தனியார் பள்ளி மாணவர்கள்

கும்பகோணம் தனியார் பள்ளியில் அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.

கும்பகோணம்
கும்பகோணம்
author img

By

Published : Feb 24, 2023, 6:21 PM IST

பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி பெற்றோருக்கு பாத பூஜை

தஞ்சை: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று(பிப்.24) அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், ஊக்கம் பெற வேண்டியும், தேர்வில் வெற்றி பெற வேண்டியும் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பள்ளி தாளாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். பெற்றோரின் பாதங்களை தண்ணீரில் கழுவி, சந்தனம் குங்குமம் வைத்து, உதிரி பூக்களால் தூவி வணங்கினர். அதைத்தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு, சந்தன - குங்குமம் பொட்டு வைத்தும், அட்சதை மற்றும் உதிரிப்பூக்களை தூவியும் ஆசீர்வதித்தனர்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணாக்கர்கள், தேர்வை அச்சமின்றி சந்திக்கவும், பெற்றோரின் அன்பும் ஆசியும் பெற வேண்டியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "அதிமுக கொடுத்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க" - ஈரோட்டில் வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.