ETV Bharat / state

கும்பகோணத்தில் 6 ஐம்பொன் சிலைகள் மீட்பு - கலைப்பொருள்கள் விற்பனையாளர் கைது! - ஐம்பொன் சிலைகள் மீட்பு

கும்பகோணத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 6 பழமைவாய்ந்த ஐம்பொன் சிலைகளை வைத்திருந்த கலைப்பொருள்கள் விற்பனையாளரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்
author img

By

Published : Jul 20, 2022, 6:44 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்ஷன் மெட்டல்ஸ் என்ற கலைப்பொருள்கள் விற்பனை செய்யும் கூடத்தில் பழமைவாய்ந்த சிலைகள் கடத்தப்படுவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கலைப்பொருள்கள் விற்பனை கூடத்திற்குச்சென்ற அலுவலர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் பதுக்கி வைத்திருந்த பழங்கால சிலைகளான கிருஷ்ணா, திருவாச்சியுடன் விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லபி கணபதி மற்றும் அம்மன் ஆகிய 6 ஐம்பொன் சிலைகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்

மேலும், சிலைகளுக்குண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளரான ராமலிங்கத்திடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 1985ஆம் ஆண்டு முதல் ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தை அவர் நடத்தி வருவதாகவும், பழங்காலப்பொருள்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள சிசோக்கே பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குப் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்க பேரம் பேசி இருப்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு ராமலிங்கம் இந்த சிலைகளை வெளிநாட்டிற்கு விற்பதற்காக, இந்திய தொல்லியல் துறையை அணுகி இருப்பதும், சிலைகளின் தொன்மையைக் கருதி நிராகரிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

சிலைகளுக்கு உண்டான போதுமான ஆதாரங்கள் மற்றும் சிலைகள் வாங்கியது குறித்த முறையான விளக்கம் இல்லாததால் உரிமையாளர் ராமலிங்கத்தின்மீது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 6 சிலைகளும் எந்த கோயிலுக்குச்சொந்தமானது என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை மாநகரப் பகுதியில் நள்ளிரவில் தொடரும் இருசக்கர வாகன திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.