திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பூங்கொடி மூலை என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்த உலோக விநாயகர் சிலை கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாயமானது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இவ்வழக்கு தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பாலமுருகன், திருச்சி பட்டாலியனைச் சேர்ந்த இளையோர் படை சிறப்பு காவலர் பொன்ராஜ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர்.
உலோக விநாயகர் சிலை கடத்தல் வழக்கில் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, காவலர் பாலமுருகன், சிறப்பு காவலர் பொன்ராஜ் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரையும் கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி மாதவ ராமானுஜம் இல்லத்தில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.