அரியலூர் மாவட்டதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில், சுத்தமல்லி பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிலை திருட்டில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு தொடர்புள்ளதாக கண்டறியபட்டது. இது தொடர்பாக சுபாஷ் கபூர் மீது வழக்கு தொடரப்பட்டு அதன் மீதான விசாரணையும் நடைபெற்றுவருகிறது.
இவ்வழக்கில், கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சுபாஷ் கபூர் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணை மேற்கொண்டு வாதங்களை கேட்றிந்த நீதிபதி, சுபாஷ் கபூரை வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.