தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் பிரதானசாலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி இந்திராகாந்தி(50). கூலி வேலை செய்துவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது அண்ணன் துரைராஜ் இறந்து விட்டார். அவரது கருமாதி செலவுக்குச் சீர் செய்யப் பணம் இல்லையென்ற வருத்தத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து 11ஆம் தேதி நண்பகலில் தின்றவர் இரவு மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இந்திரா காந்தி உயிரிழந்தார்.
இது குறித்து இந்திராகாந்தியின் கணவர் பழனிச்சாமி திருக்காட்டுப்பள்ளி காவல் துறையில் புகார் செய்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் கார்த்திக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி!