தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
![heavy rain salt production stoped thanjai coastal ares கடலோரப் பகுதிகளில் கன மழை\ உப்பு உற்பத்தி பாதிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3958184_thanjai--2-1.bmp)
ஜனவரி மாதம் முதல் தொடங்கிய உப்பு உற்பத்தி தொழில் அக்டோபர் வரை தொடர்ந்து நடைபெறும். தற்போது உப்பு வாரும் பணி நடைபெற்று வரும் தருவாயில், திடீர் மழையினால் உப்பளங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளன.
மேலும் வாரப்பட்ட உப்புக்கள் அனைத்தும் தண்ணீரில் கரைந்து மழைநீரில் கலந்துவிட்டன. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு மழை காலங்களில் நிவாரணங்கள் வழங்குவதுபோல், உப்பு உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.