உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அந்த வகையில், தஞ்சை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்களில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலாளர் சந்திரகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் துரை மதிவாணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மாதர் சம்மேளனம் மாவட்டத் தலைவர் தனசீலி, துணைச் செயலாளர்கள் தாமரை செல்வி, ஈஸ்டர் லீமா, துணைத் தலைவர்கள் பரிமளா, கண்ணகி, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, இளம்பெண்ணை கொடூரமாக கொலைசெய்த குற்றவாளிகளைக் கைதுசெய்து தூக்கிலிட வேண்டும், சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஹத்ராஸ் விவகாரம்: தஞ்சையில் கண்களில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் - Demonstration in Tanjore with black cloth tied around the eyes
தஞ்சை: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.