தஞ்சாவூர்: சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்படி கஞ்சா, குட்கா, பான் மசாலா, கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவல் உதவி இன்ஸ்பெக்டர் தலைமையிலான தஞ்சாவூர் சரக போலிஸ் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தமிழ்ப் பல்கலைக்கழக காவல் எல்லைக்குட்பட்ட கருணாவதி நகர் அருகே போலீசார் கண்காணித்த போது இரண்டு கார்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி போதைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்து தஞ்சையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது இதனையடுத்து அசோக்ராஜ், ராஜேஷ், பிரகாஷ், உள்ளிட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
அதில் சுமார் 833 கிலோ எடை கொண்ட ரூ.8,68,000 மதிப்புள்ள குட்காவையும், இரண்டு கார்களையும், பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 17ஆவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்