தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் பயன்பெறும் வகையில் காவேரி அறக்கட்டளை, சோஹா பவுண்டேஷன் மற்றும் சேவா பாரதி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், இந்து முன்னணி ஆகியோர் இணைந்து ரூ.4.60 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் கலிப்ரேஷன் கருவிகளை இலவசமாக சமூகப்பணியாளர் டாக்டர் நியூட்டனிடம், டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் முன்னிலையில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தஞ்சை கோட்டப்பொறுப்பாளர் அப்பாசாமி, இந்துமுன்னணி மாவட்டத் தலைவர் மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர் ராஜானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் ஆக்ஸிஜன் கலிப்ரேஷன் கருவியை வழங்கினர்.
இதையும் படிங்க: உயர் மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு