தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கநகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் மாதாந்திர சிறுசேமிப்பு மூலம் நகைக்காக பணம் கட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு பொதுமக்கள் வங்கியில் தாங்கள் அடகு வைத்த நகையை மீட்டு வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் கோடிக்கணக்கான பணம் ஏமாற்றியதாகவும்; தனியார் நகைக்கடை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் கடை முன்பு கூடி முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் டிஎஸ்பி ராஜா உள்ளிட்ட காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர், உறுதியளித்தனர்.
மேலும், கடை மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொடுத்த தொகை மற்றும் பெயர், செல்போன் நம்பரை காவல் துறையினரிடம் எழுதிகொடுத்தனர். இதைப் போல் ஒரத்தநாட்டிலும் நகைக்கடை மூடப்பட்டு அங்கும் புகார் செய்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கையின்போதுதான் மொத்த தொகை எவ்வளவு மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை நிலவரம் தெரியும்.
இதையும் படிங்க: சிறுமியை வன்கொடுமை செய்த வேன் ஓட்டுநர் கைது!