ETV Bharat / state

ஜெப கூட்டத்திற்கு வந்த பக்தர்கள் மீது கார் மோதி நான்கு பேர் மரணம்! - ஜெப கூடத்திற்கு வந்த பக்தர்கள் மீது கார் மோதல்

தஞ்சாவூர்: பொங்கல் தினத்தையொட்டி ஜெப கூட்டத்திற்கு பங்கேற்க வந்த பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.

car accident
car accident
author img

By

Published : Jan 16, 2020, 9:01 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆத்துமநேசர் தேவாலயத்தில் பரிசுத்த பரிவதம் என்ற ஜெபக்கூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்தில் பொங்கல் தினத்தையொட்டி சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. அதில், தஞ்சை மாவட்ட மக்கள், பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

இதில், 30க்கும் மேற்பட்டோர் வல்லம் புதுாரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள சர்வீஸ் ரோட்டில், நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த கார் ஒன்று, ஜெப கூடத்திற்கு நடந்து போன பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரில் சிக்கி, பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 'மனித வெடிகுண்டு' பயிற்சி பெற்றவர்களாம்!

மேலும், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (42), பெங்களூரைச் சேர்ந்த செல்வி (45) இவரது மகள் கீர்த்தி (20), கன்னியம்மாள் (48), ஜோதி, காரை ஓட்டி வந்த சத்தியநாராயணன் (42), காரில் பயணம் செய்த இவரது தந்தை ராமச்சந்திரன் (68), தாய் ரேவதி (65), ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், செல்வி, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:தஞ்சாவூர்,ஜன.16

தஞ்சை அருகே ஜெப கூட்டத்திற்கு பங்கேற்க வந்த பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில், பெங்களூரை சேர்ந்த 4 பெண்கள் பலியாகினர்Body:
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆத்துமநேசர் தேவாலயம் – பரிசுத்த பரிவதம் என்ற ஜெபகூடம் உள்ளது. பொங்கலையொட்டி சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. அதில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
, 30க்கும் மேற்பட்டவர்கள், வல்லம் புதுாரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர், தஞ்சாவூர் – திருச்சி பைப்பாஸ் சாலையிலுள்ள சர்வீஸ் ரோட்டில், நடந்து ஜெப கூடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்துக்கொண்டிருந்த அம்பாஸ்டர் கார் ஒன்று, நடந்த போனபக்தர்கள் கூட்டத்திற்குள்ளாக புகுந்தது. காரில் சிக்கி, பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா,25, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன்,42, பெங்களூரு சேர்ந்த செல்வி,45, இவரது மகள் கீர்த்தி,20, கன்னியம்மாள்,48, ஜோதி, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் திருநகரைச் சேர்ந்த சத்தியநாராயணன்,42, காரில் பயணம் செய்த இவரது தந்தை ராமச்சந்திரன்,68, தாய் ரேவதி,65, ஆகிய 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
செல்வி, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். வல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.